உள்ளூராட்சி தேர்தலுக்கான நியமனப்பத்திரம் கையேற்பிற்காக தயார் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் (Photos)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் கையேற்றல் நிகழ்வுக்காக முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரான அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நேற்று காலை 8.30 மணியிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தயார் நிலையில் காணப்படுவதோடு, மாவட்ட செயலகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை எந்த கட்சிகளும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.
அத்துடன் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்காக இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாதிக ஜன பல வேகய ஆகிய கட்சிகளும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
கட்டுப்பணம் செலுத்திய கட்சிகள்
மேலும், கரைதுறைப்பற்று பிரதேச சபைக்காக இலங்கை தமிழரசு கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாதிக ஜன பல வேகய, ஐக்கிய தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் துணுக்காய் பிரதேச சபைக்காக இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்காக இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் முல்லைத்தீவு தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
