சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க விசேட ஏற்பாடு
சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்க 900க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனை
மேலும் சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1913 என்ற இலக்கத்துடன் அல்லது 011 2 877 688 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 3ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் உற்பத்திகள் குறித்த சுற்றி வளைப்புக்களில் மொத்தமாக 1320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
