கோவிட் தொற்றாளிகள் குறித்து அறிவிக்க விசேட இலக்கம்
கோவிட் நோய்த் தொற்றாளிகள் தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று உறுதியாக இதுவரையில் சிகிச்சைகளுக்காக அழைத்துச் செல்லப்படாத நோயாளிகள் தொடர்பில் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
1906 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகல்களை வழங்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா அறிவித்துள்ளார்.
இதன்படி கோவிட் நோய்த் தொற்றாளர்கள் எவரேனும் வீட்டில் இருந்தால் அவர்களை சிகிச்சைகளுக்காக அழைத்து செல்வதற்காக 1906 என்ற இக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.