அத்தியாவசிய தேவைகள் குறித்து அறிவிக்க விசேட எண் அறிமுகம்
பயணக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் தகவல்களை பெற்றுகொள்ள அரசாங்கம் புதிய அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
1965 என்ற இலக்கங்களே அறிமுகப்படுத்தப்பபட்டுள்ளன .வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மீளெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிவித்தல்படி இந்த தொலைபேசி இலக்கங்கள் 24 மணித்தியாலங்களாக சேவையில் இருக்கும் என்று அறிவிககப்பட்டுள்ளது .
ஏற்கனவே பயணக்கட்டுப்பாட்டுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளை சீராக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜுன் மாதம் 7ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.