நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த விடயத்தை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அறிவுறுத்தல்
மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள் தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே என கூறியுள்ளனர்.

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
