பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் அதிரடி நடவடிக்கை - பலர் கைது
ரயில் மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களில் மூன்று பேர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் ரயில் மூலம் போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதாக கணேமுல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
மேலும் இரவில் பல்வேறு பகுதிகளில் குற்றங்களைச் செய்து பின்னர் ரயிலில் பயணம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கணேமுல்ல, யாகொட மற்றும் மலகஹகொட ரயில் நிலையங்களில் இறங்கும் மக்களை குறிவைத்து சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்று அதிகாலை மற்றும் மாலையில், வெயங்கொட இராணுவ முகாமைச் சேர்ந்த 15 அதிகாரிகள் மற்றும் கணேமுல்ல பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 20 அதிகாரிகள் கொண்ட குழுவால், அந்த ரயில் நிலையங்களை குறிவைத்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
