மலையக தொடருந்து சேவைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, இரவு நேர மலையக தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தண்டவாளங்களின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பதுளை மற்றும் கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இரவு நேர சிறப்பு தொடருந்துகள் இன்று (26.05.2024) மூன்றாவது நாளாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு
ஏனைய தொடருந்துகள் இன்று(26.05.2024) இயங்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்தோடு இன்று கணேவத்தையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தில் வலக்கும்புர பகுதியில் வைத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக குறித்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக 4 தொடருந்து சேவைகள் தாமதமடையக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 10 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan