தயாராக இருங்கள்! இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஞ்ஜன் ஜயலால்
முழு நாடும் இருளில் மூழ்கும் நாள் மிக விரைவில் உள்ளமையினால் சிறிய ஜெனரேட்டர்கள், மண்ணெண்ணெய் அடுப்பு போன்றவற்றை வீட்டில் வைத்துக் கொள்வது அதிக நன்மையை ஏற்படுத்தும் என இலங்கை மின் ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்ஜன் ஜயலால் நேற்று தெரிவித்துள்ளார்.
மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை நிர்வகிக்கும் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களே அவற்றில் நஷ்டத்தை ஏற்படுத்தினார்களே தவிர ஊழியர்கள் அல்ல என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மின்கட்டணம் செலுத்துவதாகவும், மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் ஒரு கிராமம் இருளில் மூழ்கியதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எரிபொருளைக் கடனாகப் பெற்றதாகத் தகவல்களும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் மின் நெருக்கடி தொடர்பில் தான் கருத்து தெரிவித்தமையினால் தனது சேவையை இடைநிறுத்துமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அவ்வாறு செய்தேனும் மக்களும் மின்சாரத்தை வழங்க முடியுமா என தான் அதிகாரிகளிடம் வினவுவதாக அவர் கூறியுள்ளார்.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
உண்மையை வீட்டில் கூறிய முத்து, ஷாக்கான விஜயா, ஆனால் ரோஹினி வைத்த டுவிஸ்ட்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam