இன்று முதல் பாடசாலைகள் முழுமையாக திறப்பு - பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு
தரம் 1 முதல் 13 வரையான அனைத்து வகுப்புகளின் மாணவர்களும் இன்று முதல் வழமையான முறையில் பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டில் கோவிட் பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் மாணவர்களின் தடைப்பட்ட கல்வி நடவடிக்கைகளை சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் மீண்டும் வழமையான முறையில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட் பரவியமையினால் அனைத்து பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படுவதில் குறைவு ஒன்று ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பாடசாலை கட்டமைப்புகளை சில கட்டங்களின் கீழ் ஆரம்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
அதற்கமைய கடந்த நாட்களின் அனுபவத்துடன் சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் இன்று முதல் பாடசாலைகள் அனைத்து வழமையான முறையில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் போராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு மாணவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தால் அல்லது முதல் தரப்பு தொற்றாளர் என்றால் அவரை பாடசாலை அனுப்புவதனை தவிர்க்குமாறும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கான காலை மற்றும் பிற்பகல் உணவுகளை வீடுகளில் இருந்து அனுப்பி வைக்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam