வெளியுறவு அமைச்சகத்தின் விசேட அறிவிப்பு
அரசாங்கத்தினால் இன்று விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10.06.2022 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை எண்.13/2022 இன் அறிவுறுத்தலுக்கு இணங்க, இன்று அரசாங்க அலுவலகங்கள் மூடப்படும்.
போக்குவரத்து அமைப்பில் உள்ள பிரச்சினைகள், மின்வெட்டு மற்றும் நாளை ஏற்கனவே விடுமுறை தினம் என்பதால் அலுவலக செயல்பாடுகளை பராமரிப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட சேவை
இருப்பினும் இன்று காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தூதரக விவகாரங்கள் பிரிவு மிகக் குறைந்த சேவைகளுக்கு மட்டுமே திறந்திருக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்காக இன்று திறக்கப்படவுள்ளது.
பொசன் போயாவை முன்னிட்டு தூதரக அலுவல்கள் பிரிவு நாளை மூடப்பட்டு, வழமையான பணிகளுக்காக புதன்கிழமை திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மேலும் விபரங்களுக்கு பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ள முடியும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தூதரக விவகாரப் பிரிவு – கொழும்பு 0112 338 812 / 0112 338 843
பிராந்திய தூதரக அலுவலகம் – யாழ்ப்பாணம் 0212 215 970
பிராந்திய தூதரக அலுவலகம் – மாத்தறை 0412 226 697
பிராந்திய தூதரக அலுவலகம் – கண்டி 0812 384 410
பிராந்திய தூதரக அலுவலகம் – திருகோணமலை 0262 223 182
பிராந்திய தூதரக அலுவலகம் – குருநாகல் 0372 225 941
தொடர்புடைய செய்தி
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு |



