நாடு முழுவதும் சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள்! இராணுவத் தளபதி அதிரடி நடவடிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக நாடு முழுவதும் சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீறப்படும் இடங்கள் குறித்து பொலிஸ் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது இந்த குழுக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் பலரின் நடத்தை திருப்திகரமாக இருப்பதாகவும், எனினும், சிலரின் நடத்தை வருந்தத்தக்கதாக காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நாட்டை மீண்டும் திறக்கும் முடிவு மக்களின் செயற்பாடுகளால் மாற்றப்பட்டது எனவும், மக்கள் சரியான முறையில் செயற்பட்டால், நாட்டை உரிய திகதியில் திறக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.