அநுரகுமார திஸாநாயக்கவிற்கு மூன்றாம் சார்ளஸ் மன்னர் விசேட செய்தி
இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ளஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு வழிகாட்டுவதில் சாத்தியமான அனைத்து வெற்றிகளையும் பெற வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.
புதிய ஜனாதிபதியின் கீழ் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே உள்ள நெருங்கிய உறவு மேலும் ஆழமடைவதை காண்போம் என மன்னர் சாளர்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
During his meeting with President @anuradisanayake yesterday, British High Commissioner @AndrewPtkFCDO handed over a letter of congratulations from His Majesty The King. https://t.co/iodwJUVHpi pic.twitter.com/x0BkQ3Znht
— UK in Sri Lanka ???? (@UKinSriLanka) October 3, 2024
காலநிலை அபாயங்கள்
C.O.P.29 மாநாடு நெருங்கி வருவதால், நமது சமுத்திரங்களைப் பாதுகாக்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், காலநிலை அபாயங்களைச் சமாளிக்கவும், நமது நாடுகள் கூட்டாளிகளாகவும், நவீன பொதுநலவாய உறுப்பினர்களாகவும் இணைந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிகினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் சாளர்ஸ் மன்னரின் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
