சஜித் பிரேமதாசவுடன் விசேட சந்திப்புக்கு தயாராகும் பங்காளிக் கட்சிகள்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி எதிர்வரும் 8 ஆம் திகதி மலரவுள்ளதுடன், அன்றைய நாளில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
எனவே, குறித்த உடன்படிக்கை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உட்பட மேலும் பல தலைவர்கள் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |