மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை! - அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தில் முக்கிய தீர்மானம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராயும் விசேட அனர்த்த முகாமைத்துவ கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையிலேயே இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாட், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்பு பிரதானிகள், பொலிஸ் உயரதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை ஆரம்பித்துள்ள நிலையில் அதன் காரணமாகப் பாதிப்புகள் ஏற்படும்போது அதனைத் தடுப்பது மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக நீர்ப்பாசன திணைக்களம், விவசாய திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, உள்ளுராட்சி மன்றம், பிரதேச செயலகங்கள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவினால் அச்சந்தர்ப்பத்தில் பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக அதிலும் குறிப்பாக மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகமாகப் பாதிப்பிற்குள்ளாகும் கிரான், ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு நகர், காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனர்த்த முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், கடந்த காலங்களில் அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வாறான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பான விபரங்கள் இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் காண்பிக்கப்பட்டிருந்தது.
கமநல சேவை திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள பாரிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், யானைகளால் மாவட்டத்தில் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு அனர்த்த வேளைகளில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் மற்றும் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகள் தனிநபர்களால் நிரப்பப்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை அனர்த்த காலங்களில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள்
மற்றும் அரிசி போன்றவற்றின் பொருட் கையிருப்பு போதுமானதாக உள்ளதா என்பது
தொடர்பாக வாராந்த பொருளிருப்பு கணக்கெடுப்பினை சதோச மற்றும் தனியார்
நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பில் மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபரினால் இதன்போது உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.




பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
