சமுர்த்தி திட்டம் முழுமையான இலக்கை நோக்கி கொண்டு செல்லப்படும்: டக்ளஸ் உறுதி
யாழ். மாவட்டத்தில் எந்த நோக்கத்திற்காக சமுர்த்தி திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதை முழுமையான இலக்கை நோக்கி கொண்டு செல்வதற்காக தற்காலிகமாக விசேட குழு ஒன்று நியமிக்கப்படும் என கடற்றொழில் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளேன். நான் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலில் நீரோட்டத்துக்கு பல்வேறு தடைகளைக் கடந்து வந்தவன். தமிழ் மக்களின் அரசியல் அன்றாடப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை எனது அரசியல் காலத்தில் முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு.
துரதிஸ்டவசமாக எனக்கு கிடைத்த ஆசனங்கள் போதாமையால் தெற்குடன் பேரம் பேசும் சக்தியை மக்கள் வழங்கவில்லை. தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க வேண்டுமே என்ற நினைப்பு மட்டும் எனக்கு இருக்கிறது மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை.
நான் கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைத்திருந்தேன் ஆனால் சில விடயங்களை தொடக்கி விட்டேன் முடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அரசியலில் ஈடுபட்டேன் ஆகவே எனக்கும் வயது சென்று கொண்டிருக்கிறது உடல் இயலாமை தெரிகிறது.
அதனால்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன் என
அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின்போது யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி திணைக்களத்தினை விணைத்திறனாக கொண்டு நடாத்துவது தொடர்பிலும் மக்களுக்கு தேவையான சேவைகளை தடையின்றி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
டக்ளஸிடம் கோரிக்கை
இதன்போது, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்திச் சங்கத்தினை மீள புணரமைக்குமாறு உத்தியோகத்தர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான உப குழு ஒன்றும் இன்று அமைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மற்றும் சமூர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பதினாறாவது மே பதினெட்டு 17 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
