ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
உத்தேச அமைச்சரவை நியமனம்
உத்தேச அமைச்சரவை நியமனம் குறித்து தீர்மானம் எடுக்கும் நோக்கில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
அண்மையில் விடுமுறைக்காக பசில் ராஜபக்ச அமெரிக்கா பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில் பசில் இன்று (20.11.2022) அவசரமாக நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு திரும்பவுள்ள பசில்
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பன காரணமாக பசில் அவசரமாக நாடு திரும்புவதாக மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பசிலின் வருகையின் பின்னர் அமைச்சரவை நியமனம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

