கோவிட் அறிகுறிகளுடைய சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிருங்கள் - விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை
இலங்கையில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று மீண்டும் அதிகரிப்பு
கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள சிறுவர்களுக்கு காய்ச்சலுடன் இருமல், தடிமன் மற்றும் தொண்டை உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் வீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அறிகுறிகள் தென்படும் சிறுவர்களில் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படும் வீதம் அதிகரித்துள்ளது.பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கற்றல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனவே தொற்று அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
கட்டாயமாக்கப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்
தற்போது கோவிட் தொற்று மிக வேகமாகவும், இலகுவாகவும் பரவக் கூடிய சூழலே காணப்படுகிறது. கோவிட் பரவல் மீண்டும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது இன்றியமையாதது.
சமூக இடைவெளியை பேணுவதோடு , மிக நெருங்கிய தொடர்பாடல் முறைமைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.பொது போக்குவரத்து உள்ளிட்ட சன நெறிசல் மிக்க இடங்களில் சிறந்த தரத்திலான முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri