கர்ப்பிணித் தாய்மார் குறித்து விசேட வைத்திய எச்சரிக்கை

Corona Virus Pregnancy Covid - 19 pregnant women
By Independent Writer Apr 30, 2021 07:11 AM GMT
Report

இலங்கையில் தற்போது பரவி வரும் கோவிட் வைரஸின் புதிய திரிபுகளிலிருந்து கர்ப்பிணித் தாய்மார்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத்தினர் எடுத்துரைத்து எச்சரித்துள்ளனர். 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தையும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது பரவி வரும் கோவிட் வைரஸினால் பாதிப்புக்குள்ளாகும் ஒரு குழுவாக கர்ப்பிணித் தாய்மார்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"கர்ப்பிணித் தாய்மார்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்களெனின், அவர்களைப் பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடின் இது மிகவும் துன்பகரமான விடயமாக மாறலாம்” என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக, இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத்தினர் தலைவர் விசேட வைத்திய நிபுணர், பிரதீப் டி சில்வா கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் வைரஸ் பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தான விடயமாக மாறியுள்ளதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.

உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பொதுவான சிக்கல்கள் நோய் பரவுவதற்கான பொதுவான காரணிகளாக அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் பொதுமக்களுடன் நேரடியான தொடர்புகள் ஏற்படுவதாலும், அதிக ஊழியர்கள் உள்ள இடங்களில் பணியாற்றுவதாலும், தொற்றுநோய் பரவுவதற்கு இது வாய்ப்பாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"Royal College of Obstetricians and Gynecologists” என்ற பிரித்தானிய அரச நிறுவனம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதை பரிந்துரைத்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கம் கருதுகிறது.

இந்த தடுப்பூசி கருவுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா கூறியுள்ளார்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரை பரிசோதிக்க வேறொரு இடத்தை வழங்குவது முக்கியம் எனவும், இல்லாவிடின் சாதாரண நோயாளிகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US