குற்றங்களை கண்டறிய முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை
குற்றங்களைக் கண்டறிவதை மேம்படுத்துவதற்கு பொலிஸ் சிசிடிவி (CCTV) கமரா அமைப்புடன் பொது மற்றும் தனியார் சிசிடிவி அமைப்புகளை ஒருங்கிணைக்க பொலிஸ் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்ப கட்டத்தில், கொழும்பு (Colombo) நகரில் உள்ள குடியிருப்புக்கள் உட்பட தனியார் நிறுவனங்களில் இருந்து சுமார் 2000 சிசிடிவி கமெராக்கள் பொலிஸாரின் வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ளதுடன் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
தனியார் நிறுவனங்கள்
இரண்டாம் கட்டமாக, நாடு முழுவதும் உள்ள சிசிடிவி கமரா அமைப்புக்களுடன் பொலிஸ் சிசிடிவி அமைப்பை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கொழும்பில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க வகையில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், குற்றச் செயல்களைத் தடுப்பதில் அவற்றின் தற்போதைய பங்களிப்பு குறைவாக உள்ளதுடன் பொலிஸ் திணைக்களத்திடம் 176 சிசிடிவி கமராக்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |