மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களது கல்வி நடவடிக்கையை முன்னேற்ற விசேட நடவடிக்கை - வியாழேந்திரன் (Video)

Government Batticaloa Students S. Viyalendiran
By Rusath Dec 30, 2021 09:19 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு 53.30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடம் அமைக்கப்பட உள்ளதென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.

கல்குடா வலயத்திற்குட்பட்ட இறால் ஓடை வள்ளுவர் வித்தியாலயத்தில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், நவீனமயப்படுத்தலும் இடம்பெறுகின்றது.

இருந்த போதிலும் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து மாணவர்களின் முன்னேற்றத்தை நோக்கியதான ஒரு மாற்றம் நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

ஒவ்வொரு மாணவனுக்கும் இன்றைய நவீன தொழில்நுட்ப வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். வெறும் பரீட்சைகள் மாத்திரம் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க கூடாது, ஒவ்வொரு மாணவனுக்கும் அவரவர் துறை சார்ந்து வழிகாட்டலுடன் நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும். இது ஆசிரியர் ஒவ்வொருவரினதும் கடமையாக இருக்கின்றது.

ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தனது வாழ்க்கையில் 24,000 மணித்துளிகள், 13 வருடத்தில் பள்ளியில் ஆசிரியர்களுடன் கல்வியறிவை பெறபயணப் படுகின்றார்கள்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்தான், மாணவர்களது, இளமைக்காலத்தை சிற்பமாக செதுக்கி, அவர்களது தனித்திறனை கண்டுணர்ந்து, அதை ஊக்கப்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கிறார்கள்.

ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, உயர் நிலை பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, மேல் நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, மாணவர்களது ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும், ஆசிரியர்கள் தங்களது அறிவால், வாழ்வால், நல் ஒழுக்கத்தால், மாணவர்களை ஈர்த்து, மாணவர்கள் தங்களை தாங்களே வடிவமைத்துக்கொள்ள ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்கிறார்கள். ஆக மாணவர்களது முதல் நம்பிக்கை ஆசிரியர்களும், பெற்றோர்களும் தான் என்பதே உண்மை.

ஒவ்வொரு வருடமும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சையில் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு செல்லும்போது அந்த தேர்வில் 3 லட்சம் மாணவர்கள் மாத்திரமே உயர்தர வகுப்புகளுக்கு தெரிவாகின்றனர். ஏனையோர் கல்வி நிலையை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதும் அவை சிறந்த கொள்கை திட்டத்தின் கீழ் பின்தங்கிய பிரதேசங்களை விஸ்தரிக்க படவில்லை.

எதிர்காலத்தில் அனைத்து மாணவரும் ஏதேனும் ஒரு துறையில் அரசாங்கத்தின் உதவியோடு பட்டப்படிப்பு வரை கல்வியை தொடர வழி வகுக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த உயர் தொழில்நுட்ப பீடம் அமைக்கப்படுகின்றது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வழிகாட்டலுடன் மாணவர் சமுதாயத்தினருக்கு தொழிற்கல்வி மற்றும் உயர் தொழில்நுட்ப ஆர்வமுள்ளவர்களுக்கு மின்னியல், இலத்திரனியல், பொருளியல் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை மேம்படுத்த கல்வி அமைச்சின் உயரிய நோக்கத்துடன் உயர் தொழில்நுட்ப பீடம் அமைக்கப்பட உள்ளது.

இந்தக் கற்கை நெறிகள் ஊடாக எதிர்காலத்தில் மாணவர் சமுதாயத்தினருக்கு சர்வதேச ரீதியிலான உயர் தொழில்நுட்ப தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வித் தகைமை உடைய சமுதாயமாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக மாணவர்கள் மத்தியில் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு 53.30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப பீடம், மூன்று மாடி கட்டிட தொகுதி முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதனூடாக மாணவர் மத்தியில் மின்னியல், இலத்திரனியல் , பொறியியல் துறை சார்ந்த நவீன தொழில்நுட்பத் திறனை கல்வி நடவடிக்கைகளுடன் மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

இந்த கற்கை நெறியின் ஊடாக உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளில் பல தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றது.

தற்போது உள்ள அரசாங்கத்தினால் 25 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இந்த உயர் தொழில்நுட்ப பீடத்தின் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவ் வேலைத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் நான்கு பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அதில் திருகோணமலை மாவட்டத்திற்கு ஒரு பாடசாலையும், அம்பாரை மாவட்டத்திற்கு இரண்டு பாடசாலையும், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலையும் தொழில்முறை கல்விக்காக உயர் தொழில்நுட்ப பீடத்தை அமைப்பதற்காக கல்வி அமைச்சின் ஊடாக அனுமதி கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US