தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஜனாதிபதி தரப்புக்கு விசேட கடிதம்
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் இருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ள சலுகைகளை மீள வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்திக குமாரநாயக்கவுக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் கைது செய்ய உத்தரவிடப்பட்ட தேஷபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மற்றும் கார் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தேஷபந்து தென்னகோனுக்கு ஒரு உத்தியோகபூர்வ வீடு, ஒரு உத்தியோகபூர்வ கார், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் ஆறு அதிகாரிகள், பொலிஸ் சிறப்புப் படையின் இரண்டு அதிகாரிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு மற்றும் சலுகை
இருப்பினும், அவரது பாதுகாப்பு மற்றும் சலுகைகளை திரும்பப் வழங்குமாறு பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமநாயக்கவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு குற்றப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கிச் சூட்டில் பலியானமை தொடர்பாக தேஷபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும் உத்தரவுக்கு அமைய தேஷபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதாகவும், அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா! அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் என தென்கொரியா பதற்றம் News Lankasri

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
