புலனாய்வு அமைப்புகளுக்கு சவாலாகியுள்ள அரசாங்கத்தின் நடவடிக்கை
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக புலனாய்வு அமைப்புகள் பலவீனமடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமியாவின் தலைவர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இதனை அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நீக்கப்பட்ட 13 புலனாய்வு அமைப்பு உறுப்பினர்களின் பெயர்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய விவாதம்
இந்த சம்பவம் தொடர்பாக சமூகத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விவாதம் நடந்துள்ளது என்றும், இந்த அதிகாரிகளின் அடையாளத்தை வெளிப்படுத்துவதன் மூலம், புலனாய்வுத் துறை பெரும் பாதுகாப்பின்மைக்கு ஆளாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த நாட்டின் வரலாற்றில் அவமானகரமான துரோகமாகக் கருதப்படும் மில்லினியம் நகர ஊழலும், இதேபோன்ற ஒரு சம்பவம் என்று சுட்டிக்காட்டிப்படுகிறது.
மில்லினியம் நகர ஊழல் சம்பவத்திற்குப் பிறகு, இராணுவ புலனாய்வு அதிகாரிகளாகவும், புலனாய்வுத் துறையின் ஆணையிடப்படாத அதிகாரிகளாகவும் பணியாற்றிய உளவாளிகள், 2002 ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்டனர்.
மேலும்,2015 நல்லாட்சி அரசாங்கம் புலனாய்வு அமைப்புகளை பலவீனப்படுத்திய பின்னர் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற ஒரு பேரழிவு எதிர்காலத்தில் நிகழ வாய்ப்புள்ளது” என்று அவர் கம்மன்பில குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |