தேசபந்து மீதான விசாரணை! சபாநாயகர் விசேட கடிதம்
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்படும் மூன்று பேர் கொண்ட குழுவிற்கான ஒரு உறுப்பினரை பரிந்துரைக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நிலையியற் கட்டளைகளின்படி, குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் முழு ஒப்புதலுடன் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும்.
இதன்படி தலைமை நீதிபதி இந்தக் குழுவிற்கு ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டும்.
பொலிஸ் ஆணைக்குழு
மேலும் குழுவிற்கு நியமிக்கப்படும் மற்ற உறுப்பினர் பொலிஸ் ஆணைக்குழு சார்பில் காணப்படுவார்.
இதன்படி இந்தக் குழு அடுத்த சில நாட்களில் நியமிக்கப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
