கடமைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை

Sri Lanka Economic Crisis Sri Lanka Ceylon Teachers Service Union
By Thileepan Jun 19, 2022 06:18 PM GMT
Report

கடமைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க கல்வியமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இரு வாரங்கள் பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வியமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் நகர்ப்புறப் பாடசாலைகளை மூடுவதாகவும், கிராமப்புறப் பாடசாலைகளை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பாடசாலைகளின் வகைகள்

பாடசாலைகள் அனைத்தும் வகை 1ஏபி, 1சி , 2 என்னும் வகைகளாகவும், கஸ்ட - அதிகஸ்ட பிரதேச பாடசாலைகளாகவுமே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றுவரை, நகர்ப்புறப் பாடசாலைகள் மற்றும் கிராமப்புறப் பாடசாலைகள் எவை? என்பதைத் தீர்மானிப்பதற்குரிய குறிகாட்டிகள் எவையும் வெளியிடப்படாத சூழலில், சில மாகாணங்களில் சகல பாடசாலைகளையும் நடாத்தும் செயற்பாடு நடைபெறுகின்றது.

கிராமப் பாடசாலைகளை நடாத்தும் முடிவை கல்வியமைச்சு எடுத்திருந்தாலும், கஸ்ட - அதிகஸ்ட பிரதேச பாடசாலைகள் கிராமப்புறங்களிலேயே அமைந்துள்ளன.

கடமைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை | Special Leave For Teachers

இவ்வகையான பாடசாலைகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்தும்,தூர இடங்களிலிருந்தும் ஆசிரியர்கள் சென்று பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றுபவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கான எரிபொருள் வசதிகளைப் பெறுவதற்குரிய எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்யாது, பணிக்கு அழைக்க எடுத்துள்ள முடிவு கண்டனத்துக்குரியதாகும்.

பாடசாலைகளை சீராக நடத்த முடியாமைக்கு அரசாங்கமே காரணமாகும். பொருட்கள் தட்டுப்பாடான நிலையில் மக்களுக்கான பங்கீடு தொடர்பாக அரசாங்கத்தின் செயற்திறனற்ற தன்மைகளே நெருக்கடிகளை தீவிரப்பபடுத்தியுள்ளன.

எனவே, பாடசாலைகளுக்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் கடமைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. கடமைக்குச் செல்லாத ஆசிரியர்களுக்கு விசேட லீவு அனுமதிக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளருடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US