சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாடு: செந்தில் தொண்டமானுக்கு சிறப்பு அழைப்பு
இவ்வருடம் இந்தியாவில் பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொடமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாநாடானது இம்மாதம் 24,25 ஆம் திகதிகளில் தமிழ் நாட்டில் பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
இம்மாநாட்டின் உலகளாவிய ரீதியில் இந்து சமயத்தின் வளர்ச்சி குறித்து செந்தில் தொண்டமான் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறப்பு நிகழ்வு
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முருக பக்தர்கள், ஆன்மிக பெரியோர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் விழாவாக இது காணப்படுகிறது.
தமிழ் கடவுள் என போற்றப்படும் முருக பெருமானின் பெருமைகளை உலகறியும் வகையிலும், பறைசாற்றியவர்களை சிறப்பிக்கும் வகையிலும் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வு இங்கு நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
