பாரம்பரிய முறையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய மகா உற்சவம்
பாரம்பரிய முறையில் கொடியேற்றத்துடன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வருடாந்த மகா உற்சவம் ஆரம்பமானது.
குறித்த ஆலயத்தில் முதல் முறையாக பாரம்பரிய முறையில் கொடிச்சீலை எடுத்து வரும் வைபவம் இன்று (10) நடைபெற்றது.
தமிழர்களது பாரம்பரியத்தில் விவசாயம் மிகவும் முக்கியமானது.அந்தவகையில் இயந்திரங்களுக்கு முன்னர் எருதுகள் பயன்படுத்தப்பட்டது.
விசேட பூசைகள்
அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில் எருது பூட்டி கந்தசாமி கோவில் வருடாந்த உற்சவத்திற்கான கொடிச்சீலை பிள்ளையார் கோவிலிலிருந்து எடுத்து வரப்பட்டதோடு இந்த முறையானது வருடம் தோறும் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அடுத்ததாக இந்த ஆலயத்தில் முதல் முதலாக இதனைச் செய்துள்ளோம் என விழாவில் கலந்து கொண்ட குருக்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விசேட பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வருடாந்த மகா உற்சவத்துக்கான கொடி ஏற்றப்பட்டது.
பக்தர்கள் புடைசூழ மிக பிரமாண்டமாக இடம்பெறும் வருடாந்த உற்சவத் திருவிழா 10 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் 18ம் திகதி தேர்த் திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெரும் சிக்கலில் ட்ரம்ப்... ரோந்து பணியில் கூட்டாக பயணித்த ரஷ்ய, சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் News Lankasri
