மொடர்னா தடுப்பூசி குறித்து வெளியான போலி செய்தி! தீவிர விசாரணை ஆரம்பம்
கொவிட் தடுப்பூசிகளில் ஒன்றான மொடர்னா தடுப்பூசி குறித்து போலி செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியவர்களை கண்டறியும் நோக்கில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கண்டி வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியினால் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் இவ்வாறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மொடர்னா தடுப்பூசி உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் எனவும், அதில் நனோ தொழில்நுட்பம் உள்ளடங்கியுள்ளதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் போலியாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மொடர்னா தடுப்பூசி தொடர்பில் போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படும் என மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த போலிப் பிரச்சாரம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
