நுவரெலியாவில் வாகனங்களை தீவிரமாக பரிசோதனை செய்ய விசேட நடவடிக்கை
நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் நுவரெலியா வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நடவடிக்கை நேற்று (22) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது.
நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
சட்ட நடவடிக்கைகள்
மொத்தமாக 40 வாகனங்கள் பரிசோதனை செய்ததில் 22 வாகனங்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கை போக்குவரத்து சபையின் சேவையில் ஈடுபடும் 10 பேருந்துகளும், 8 தனியார் பேருந்துகளும் 4 லொறிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் மோட்டார் வாகன பரிசோதகர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்களையும், தனியார் பேருந்துகளையும், பொருத்தமற்ற நிலையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பல தனியார் வாகனங்களையும் தற்காலிகமாக சேவையிலிருந்து நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தனர்.
அத்துடன், அந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டது.
பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலதிக உதிரிபாகங்கள்
அத்துடன் அபாயகரமான மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படும் வரை வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வருடாந்த வருவாய் உரிமங்கள் நுவரெலியா போக்குவரத்து பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றி மீண்டும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் காட்டப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
நுவரெலியா - கண்டி பிரதான வீதி மற்றும் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியிலும் முதல்கட்டமாக பல இடங்களில் நின்று இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருதியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் அதிகரிப்பைக் கருத்திற் கொண்டும் இனி வரும் நாட்களில் வாகன குறைப்பதற்கு, விபத்துகளால் பலர் உயிரிழப்பதையும், அங்கவீனர்களாவதையும் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
எனவும் இதில் வாகனங்களில் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள தேவைக்கு புறம்பான மின்விளக்குகள் காரணமாக எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்களை வீதியில் செலுத்த முடியாமல் போகலாம் இதனால் விபத்துகள் சம்பவிப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
