வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள முக்கிய அறிவிப்பு
உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

குறுஞ்செய்திகளை திருத்தலாம்
தற்போது வரை வாட்ஸ் அப்-பில் பயனர்கள் தாங்கள் பிறருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை "திருத்தம்" செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த சிக்கலை போக்கும் வகையில் பயனர்கள் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை திருத்தம் செய்யும் வசதியை உருவாக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
இந்த வசதி அறிமுகமான பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்-ஐ அப்டேட் செய்து அதை பயன்படுத்தி கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri