எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போருக்கு அவசர அறிவுறுத்தல்
எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருப்போருக்கு பொலிஸார் அவசர அறிவித்தலொன்றை வழங்கியுள்ளனர்.
மோசடி
அதன்படி எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
எரிபொருளை பெற்றுத் தருவதாக கூறி வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தை பெற்று சிலர் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான மோசடிக்காரர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை இவ்வாறானவர்கள் குறித்த தகவல்கள் அறிந்திருப்பின் தமக்கு அறியப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரிபொருள் கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்! இலங்கையில் நடைமுறைக்கு வருகிறது புதிய திட்டம் |
மகரகமவில் பதிவாகியுள்ள சம்பவம்
இவ்வாறானதொரு மோசடி சம்பவமொன்று மகரகம பகுதியில் பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 5 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
