பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நாளையதினம் (27) மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அந்தந்த மாகாண கல்வி அமைச்சுகள் முன்னரே அறிவித்திருந்தன.
கல்வி நடவடிக்கை
இதன்படி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளையதினம் இடம்பெறவேண்டிய கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் மாகாண கல்வி அமைச்சுகள் அறிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
