தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
நாட்டில் மேலும் சல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை (20) தொடர்ந்து அதற்கு அடுத்து வரும் நாளாகிய செவ்வாய்க்கிழமை (21.10.2025 )அன்று கௌரி விரதம் அனுஸ்டிக்க இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைகள் குறைவாக இருக்கும் எனும் காரணத்தினால் அன்றைய தினம் கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விசேட விடுமுறை
இதற்காக, 25.10.2025 அன்று திகதி பதில் பாடசாலை நடத்துவதற்கும் அனுமதி கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது.
விசேட விடுமுறை வழங்க கோரியும், அதற்கான பதில் பாடசாலை நடத்துவதற்கு அனுமதிக்கோரியும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




