செவ்வந்தி எனது காதலி அல்ல..! நாமல் வெளிப்படை
தான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரை தான் காதலித்தேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் பொறுப்பு
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அது பொலிஸாரின் பொறுப்பு. ஆனால் பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் பொலிஸார் கவனிக்க வேண்டும்.

ஒரு குழு திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக பொலிஸாருக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார்.
அப்படியானால் இந்த செயலாளர் யார்? இந்த தகவலை பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு கொடுத்தது யார்? இதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது.
பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்கள்
வெளியேறிய மக்களில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். எனவே, பொலிஸ்துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், 323 கொள்கலன் தப்பியது போலவே பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது.
அரசாங்கத்தில் சிலர் "நீதிமன்ற உத்தரவுகளை ஏன் ஏற்க வேண்டும்?" என்று சொல்லும் நிலையை அடைந்துவிட்டனர். இதிலிருந்து அமைப்பு மாற்றம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும் அவர் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri