நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8 ஆவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க! வெளியான விசேட வர்த்தமானி
இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(20) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவின் போது, இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க134 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளை பெற்றார்.
ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின்படி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 2022 ஜூலை 20ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.