நெடுந்தீவின் முன்னேற்றத்திற்கு விசேட நிதி: அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் (Ranil Wickramasinghe) கலந்துரையாடி யாழ்ப்பாணம் (Jaffna) நெடுந்தீவிற்கான விசேட நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த கூட்டத்தில் நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்கமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.
பிரதேச முன்னேற்றம்
அதேவேளை, பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து, விவசாயம், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர்பாசனம் உட்பட பல்வேறு விடயங்கள் இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan