கொழும்பில் இருந்து தமிழர் தரப்பின் முக்கிய ஆவணத்துடன் டெல்லி பறந்த சிறப்பு விமானம்? (Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சின் உரையானது ஒரு பேச்சுக்காக ஜனாதிபதி வழங்க வேண்டும் என்பதற்காகவே வழங்கியிருக்கின்றார். இதில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தொடர்பில் சொல்லப்படவில்லை என டெலோ அமைப்பினுடைய சர்வதேச பொறுப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாருக்குமே எந்த பிரயோசனமும் இல்லாத ஒரு சம்பிரதாயபூர்வமான உரையாக மாத்திரமே இதனை பார்க்க வேண்டியிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ்க் கட்சிகளினுடைய ஒருங்கமைவில் இந்தியாவுக்கான ஒரு கடிதம் வரையப்பட்டிருக்கின்றது. அந்தக் கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்திய பிரதமரிடம் இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டம், குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற வாத பிரதிவாதங்களுடன் உருவான இந்த கடிதம் தற்போது அனுப்பி வைப்பதற்காக இலங்கையில் இருக்கக் கூடிய இந்திய தூதுவராலயத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் குருசாமி சுரேந்திரன் விரிவாக விபரிக்கையில்,
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri