அரச கரும மொழி வாரத்தை முன்னிட்டு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் வவுனியாவில் விசேட நிகழ்வு
அரச கரும மொழி வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் பிரதி அமைச்சர் முனீர் முலப்பரின் பங்கேற்புடன் விசேட நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் நேற்று(03.07) இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அரசகரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு ''மனதை வெல்லும் வழி மொழியாகும்'' என்னும் தொனிப் பொருளில் நாடு முழுவதும் பொதுமக்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சான்றிதழ் வழங்கல்
அதற்கமைவாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ், சிங்கள, முஸ்லிம் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல், அரசகரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கல், இரண்டாம் மொழிக் கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பன இதன்போது இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், யாழ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சாமிநாதன் விமல், அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
