விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் தொடர்பில் வெளியான தகவல்
அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பது
தொடர்பான சுற்றறிக்கையை நீதிமன்றில் மனுவொன்றின் ஊடாக முன்வைப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
60 வயது நிரம்பிய வைத்திய நிபுணர்களுக்கு கட்டாய ஓய்வை வழங்குவதற்கு அமைச்சரவை
மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி 176 வைத்திய நிபுணர்கள் தாக்கல் செய்த மனு
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்களின் சேவைக் காலம்
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம்.சி.பி.எஸ்.மோரோயஸ் ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பதற்கு அரசாங்கம்
தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் சுகாதார அமைச்சரினால் வெளியிடப்படும் சுற்றறிக்கையில்
உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மனுவொன்றின் மூலம் நீதிமன்றில் முன்வைக்கப்படும் எனவும்
சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |