தேசிய மக்கள் சக்தியினரின் விசேட கலந்துரையாடல்
நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது (16) புதன்கிழமை மாலை நுவரெலியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பல்வேறு விடயங்கள் கலந்தாய்வு
இக்கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் புதிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியதோடு ஆட்சி, அதிகார நிலவரம் தொடர்பாகவும் தமது எதிர்கால செயற்பாடுகள் பற்றியும், முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு நாம் அனைவரும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டுமென வருகை தந்த பொது மக்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் தமது பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வருமாறும் இதன்போது வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஏராளமான பொது மக்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.