மன்னார் மாவட்ட விளையாட்டு துறையின் அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தின் விளையாட்டு துறையில் அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன் னெடுப்பதற்காகவும், எதிர் காலத்தில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தி சிறந்த முறையில் நடாத்தி செல்வதற்குமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது மாவட்ட செயலாளர் க.கணகேஸ்வரன் தலைமையில் இன்று(8) மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தின் விளையாட்டு துறையின் பிரதி நிதித்துவம் வழங்கும் வகையில் பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
மேலும், பல்வேறு விளையாட்டுத் துறையினை மேம்படுத்து முகமாக ஒவ்வொரு விளையாட்டுத் துறைக்குமான பொறுப்பான குழு உறுப்பினர்கள் இன்றைய தினம்(08) தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
