குப்பைகளை உரிய முறையில் கையாளுவது தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்
நுவரெலியா பிரதேசசபையின் தவிசாளர் வேலு யோகராஜின் தலைமையில் நேற்று நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் மற்றும் தோட்ட வைத்திய அதிகாரி மற்றும் கிராம சிவில் பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் பிரதேசசபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
விசேட கலந்துரையாடல்
இதன்போது தோட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை முறையாக நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவது தொடர்பிலும் எவ்வாறான செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் இதன்போது விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பொதுமக்களின் சுகாதார நலத்திட்டங்களை கருத்தில் கொண்டு கடந்த காலங்களில் நுவரெலியா பிரதேச சபையுடன் இணைந்து பல செயற்திட்டங்களை முன்னெடுத்து போன்று இம்முறையும் வருகை தந்த அனைத்து தரப்பினர்களின் ஒத்துழைப்புகளையும் ஆலோசனைகளையும் எதிர்கால செயற்பட்டங்களையும் பிரதேச சபையுடன் இணைந்து செயல்படுத்துவோம் என தவிசாளர் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
குறை நிறை
மேலும் வருகை தந்த அனைத்து தரப்பினர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக செயல்படுத்த முடிந்த விடயங்களை செயல்படுத்தி தருவதாகவும் தவிசாளர் வருகை தந்தவர்களிடம் தெரிவித்துக் கொண்டார்.




