எல்ல ஒடிசி சுற்றுலா தொடருந்து தடம்புரள்வு
கொழும்பு - கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற எல்ல ஒடிஸி சுற்றுலா தொடருந்து வட்டகொட தொடருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் தடம்புரண்டதாக நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதில் பின்புற எஞ்சின் கொண்ட ஒரு தொடருந்து பெட்டி தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்கள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வட்டகொட தொடருந்து நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது தொடருந்து தடம்புரண்டுள்ளது.

பயணிகள் மற்றொரு தொடருந்திற்கு மாற்றம்
மேலும் அதை சரிசெய்ய கண்டி தொடருந்து நிலையத்திலிருந்து தொடருந்து பேரிடர் பணியாளர்கள் குழு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மலையக மார்க்கத்திலான ஏனைய தொடருந்து சேவைகளுக்கு எந்த தடங்கலும் ஏற்படவில்லை எனவும் எல்ல ஒடிசி தொடருந்தில் பயணித்த பயணிகள் மற்றொரு தொடருந்திற்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri