டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்று நோய்த்தடுப்பு பிரிவினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதானமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு பரவாமல் இருப்பதற்கான அவசியமானதும் அவசரமானதுமான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தினை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்று நோய்த் தடுப்பு பிரிவின் வைத்தியர் வி.விஜிதரன் வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப்
பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள்,
வலயக்கல்வி பணிப்பாளர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொது
சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும்
கலந்து கொண்டுள்ளனர்.

அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri