கிளிநொச்சி வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்(Photo)
கிளிநொச்சி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று(21) நடைபெற்றுள்ளது.
பிரச்சினைகள்

இந்த கலந்துரையாடலின் போது அரிசி ஆலைகளில் அரிசி விலை நிர்ணயம்,
நெல்கொள்வனவு, போக்குவரத்து,எரிபொருள் கொள்வனவு
நுகர்வோர் கட்டுப்பாட்டு சபையின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலான
பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மக்களுக்கு எரிபொருட்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஒரு முறைமையை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தீர்வுகள்
இதற்கமைய, மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட மட்டத்தில் அட்டை முறைமை ஒன்று அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மேலும், சாதாரண குடும்பம், கடற்றொழிலாளர்கள், விவசாயம் செய்வோர் மற்றும் ஏனைய அமைப்புக்கள் என பிரித்து எரிபொருள் வழங்கவிருப்பதாகவும் முறைகேடுகள் நடைபெறாத வகையில் மாவட்ட உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துமாறு கூறப்பட்ட விலை நிர்ணயத்திற்கு அமைவாக அனைவரும் செயற்படுமாறும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட அரிசி ஆலை
உரிமையாளர்கள், வர்த்தக சங்கத்தினர், மொத்த சில்லறை விற்பனையாளர்கள், மற்றும்
ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam