போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பு கலந்துரையாடல்
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “போராளிகளின் வாழ்வியலும் ஜனநாயக அரசியலும்” என்ற தொனிப்பொருளில் வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கிடையிலான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது (6.9.2026) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த போராளிகள் நலன்புரிச் சங்க நிர்வாகிகள் மற்றும் போராளிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கருத்துப் பரிமாற்றங்கள்
குறிப்பாக, எமது மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி மற்றும் ஜனநாயக அரசியல் தொடர்பான முக்கியமான விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

முன்னாள் போராளிகளும் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, ஒற்றுமையுடனும் ஜனநாயக வழியிலும் எதிர்காலத்தில் செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
போராளிகளின் நலனையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னிறுத்திய இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.


