இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி விசேட கலந்துரையாடல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதன்போது, இந்திய இழுவைமடிப் படகு கடற்றொழிலாளர்களால் நயினாதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பா பார்த்தீபன், மங்களேஸ்வரன் கார்த்தீபன், நயினாதீவு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri