சுமந்திரனிடம் இந்தியத் உயர்ஸ்தானிகர் முன்வைத்துள்ள கோரிக்கை
இலங்கைத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு ஒன்றுக்கு தென்னிலங்கைத் தரப்புகளைச் சம்மதிக்கச் செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதித்
தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் அனைவருடனும்
திறந்த மனதுடன் பேச்சுக்களை நடத்துங்கள் என இன்று காலை தம்மை சந்தித்தபோது இந்தியத் உயர்ஸ்தானிகர்
குறிப்பிட்டதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள இந்தியத் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா. ''இனவாதம் தலை எடுக்காத இந்தத் தேர்தல் சமயம்தான் எல்லாத் தரப்பினுடனும் திறந்த மனதுடன் பேசுவதற்கு மிகப் பொருத்தமான காலம்.
High Commissioner @santjha met ITAK MP @MASumanthiran today. Discussed issues of mutual interest and the recent political developments in Sri Lanka, including in the North and the East. pic.twitter.com/0ZgkU83irx
— India in Sri Lanka (@IndiainSL) August 14, 2024
நிபந்தனை இன்றிய பேச்சுவார்த்தை
எல்லா வேட்பாளர்களுடனும் நிபந்தனை ஏதுமின்றிப் பேசுங்கள். அவர்களை இணங்க வைக்க முயலுங்கள். அப்படிப் பேசுபவர்களில் யார் தீர்வுக்குப் பொருத்தமானவர்கள் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு, அவர்களை ஆதரிக்கும்படி உங்கள் மக்களை நீங்கள் வழிபடுத்தலாம்.
அது இறுதி நேரத்தில் செய்ய வேண்டியது. இப்போது நீங்கள் எல்லோருடனும் மனம் விட்டுப் பேசுங்கள். பொதுவாக இணங்கக் கூடிய விடயங்களை அடையாளம் காணுங்கள்.
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரினதும் கருத்து நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்தச் செய்யும் விதத்தில் அவர்களுடனான உங்களுடைய உரையாடல் அமைய வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினை
அப்படி அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்களாயின் தேர்தலின் பின்னர்தன்னும் தென்னிலங்கை, தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க அது உதவும்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினிடமும் நான் இதைத்தான் கூறியுள்ளேன். எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை விரும்பினால் நீங்கள் இறுதிக் கட்டத்தில் எடுக்கலாம்.
அதற்கு முன்னதாக இப்போது எல்லாத் தரப்பினருடனும் திறந்த மனதுடன் பேசுங்கள்.” என தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள், அரசமைப்பின் 13 ஆவது திருத்த நடைமுறையாக்கம் ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டுள்ள நிலைப்பாடு, அவை தொடர்பில் தாம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் என்று ரணில் பட்டியலிட்டுள்ள விடயங்கள குறித்து சுமந்திரன் மூலமான தகவல்களை இந்தியத் உயர்ஸ்தானிகர் இன்று விளக்கமாகக் கேட்டறிந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்ததாகவும், இதன் பின்னர் சுமந்திரன் எம்.பி., ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து உரையாடியதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |