ஜனாதிபதித் தேர்தல் குறித்து சமல் ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதோடு அவர் இந்த நாட்டில் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளார்.

எனவே, மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியக்குமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam