நல்லூர் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட குழு : கிழக்கு ஆளுநர் உத்தரவு
மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil thondaman) உத்தரவிட்டுள்ளார்.
நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையிலுள்ள (Trincomalee) ஆளுநர் செயலகத்தில் தங்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து ஆளுநரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
வாழ்வாதார அச்சுறுத்தல்
இதனையடுத்து நல்லூர் பிரதேசத்தை ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டு, வெளி ஆக்கிரமிப்பாளர்களால் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து ஆராய்ந்துள்ளதுடன் பழங்குடியின மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில், பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை ஆராயவும், உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் உடனடியாக குழுவொன்றை நியமிக்குமாறு திருகோணமலை அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |