வர்ண முடி - காதணிகள் அணிந்த மாணவர்கள்! அரசாங்கத்தை எச்சரிக்கும் அதிபர் சங்கம்
பாடசாலை மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் பாரிய கேள்விகள் எழுந்துள்ளதாக அதிபர் சங்கம் எச்சரித்துள்ளது.
தலைமுடிக்கு வண்ணம் தீட்டுதல், ஆண் மாணவர்கள் காதணிகளை அணிதல் மற்றும் பெண் மாணவர்களின் மூக்குத்திகளை அணிதல் போன்ற ஒழுக்கமற்ற செயல்கள் தொடர்பில் இதனால் சமூகத்தில் கேள்விகள் எழுப்பப்படலாம் என்றும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் மீதான அத்துமீறல் செயற்பாடுகளை தடுப்பதற்கான தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழியப்பட்ட சட்டமூலமானது அதன் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலையில் ஒழுக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சவால்கள் உறுவாகும் என அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சிறப்பு சுற்றறிக்கை
இந்த சூழ்நிலையில், பாடசாலை மாணவர்கள் ஒழுக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதை விளக்கும் சிறப்பு சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர்களுக்கு வெளியிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் நேற்று (29.09.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ,
“முன்மொழியப்பட்ட சட்டமூலம் காரணமாக ஆசிரியர் - அதிபர் சமூகம் பல சிரமங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கக்கூடும்.
இதனா காரணமாக கல்வி அமைச்சு இந்த பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
வெவ்வேறு வழிகளில் தலைமுடிக்கு வண்ணம் தீட்டுதல், ஆண் மாணவர்கள் காதணிகளை அணிதல் மற்றும் பெண் மாணவர்களின் மூக்குத்திகளை அணிதல் போன்ற ஒழுக்கமற்ற செயல்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
தனித்துவமான கலாசாரம்
ஒரு பாடசாலையின் நிலையான ஒழுக்காற்று முறை அந்தப் பாடசாலையின் தனித்துவமான துணை கலாசாரம் என்பதாகும்.
இந்தப் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால், அந்த விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டு, மாணவர்களுக்கு வரம்பற்ற சுதந்திரம் கிடைக்கும் அபாயம் காணப்படும்.
இந்நிலையில் இதன் இறுதி விளைவு பெற்றோருக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ கீழ்ப்படியாத ஒரு வக்கிரமான சமூகத்தை உருவாக்க கூடும்.
மேலும் எதிர்காலத்தில் அரசாங்கம் எதிர்பார்க்காத ஒரு விளைவாக கூட இருக்கும்” என நிமல் முதுங்கொடுவ கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



